Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கார்கில் போர் வெற்றி தினம்: பாகிஸ்தானை வீழ்த்திய 'ஆபரேஷன் விஜய்'

கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
 
ஜூலை 26-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக்கு மற்றுமொரு வெற்றிக்கான தினம். இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தால் மூண்ட கார்கில் போரில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த நாள் இன்று. இச்சம்பவம் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் 22 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
 
1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் கார்கில் பகுதிக்குள், பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சற்றும் தளராத இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. கார்கிலில் நிகழ்த்தப்பட்ட போர் திட்டத்துக்கு 'ஆபரேஷன் விஜய்' என பெயரிடப்பட்டது.
இதனிடையே கார்கில், லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் மூண்டது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு போரிட்ட இந்திய ராணுவ வீரர்கள், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரையும், பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக்கொடி நாட்டினர்.
 
image
நாட்டை காக்க நடந்த இந்த போரில் எதிர்பாராத விதமாக ஐநூறுக்கும் அதிகமான இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். கார்கில் போரானது மே மாதம் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி நிறைவுக்கு வந்த இந்நாள் விஜய் திவஸ் என்று அழைக்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்