கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்
- 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது
- 2016-21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50லட்சம் கோடியாக உயர்ந்தது
- தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது
- கடந்த 5 ஆண்டுகளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
- கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது
- 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை.
- மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.
- மின்வாரியத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் தன்மை குறைந்து வட்டி அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் பலமடங்கு சரிந்துவிட்டது.
- தமிழக அரசுக்கான வருமானம் 4ல் ஒருபங்கு குறைந்துவிட்டது.
- முந்தைய திமுக ஆட்சியில் வருமானம் உபரியாக இருந்தது
- முந்தைய திமுக ஆட்சியில் 1.02% ஆக இருந்த வரி அல்லாத வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 0.17 ஆக குறைந்தது
- உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் தமிழக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு
- தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி வருவாயாக மத்திய அரசு ரூ.20,033 கோடியை தரவேண்டியுள்ளது
- திமுக ஆட்சிக்காலத்தில் உற்பத்தியில் வருமானம் 13.89% ஆக இருந்தது; தற்போதைய வருமானம் உற்பத்தியில் 4.65% சரிந்துள்ளது.
- மானியங்களுக்கு அதிமாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான சரியான பயனாளிகள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் இல்லை
- தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது.
- பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை; வரியை உயர்த்தாததால் பணக்காரர்களுக்கே பலன்
- மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி கட்டணம் செலுத்தவில்லை
- உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் என ரூ.1,743 கோடி பாக்கி வைத்ததுள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மறைமுக கடன் 39,079 கோடி
- தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது
- டான்ஜெட்கோ 90%, போக்குவரத்து கழகங்கள் 5% கடன் பெற அதிமுக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
- தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை 92,000 கோடி
- தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது
- கடன் வாங்கி செய்யப்படும் முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய்ப்பங்கு 0.45% ஆக மட்டுமே உள்ளது
- மின்சாரத்துறையில் மட்டும் அரசுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடன் உள்ளது
- ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது
- 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது
- டீசல் விலை உயர்வு, மேலாண்மை செலவு ஆகியவற்றால், ஒரு 1 கிலோ மீட்டருக்கு அரசு பேருந்து ஓடினால் அரசுக்கு ரூ 59 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்