Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனாவால் 136 காவலர்கள் உயிரிழந்துள்ளனர் - டிஜிபி சைலேந்திர பாபு

கொரோனா வைரஸ் தொற்றால் காவல்துறையைச் சேர்ந்த 136 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ''கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் முக்கியமாக களப்பணியாற்றியவர்கள் காவல்துறையினர்.

image

கொரோனா தொற்றால் இதுவரை தமிழகம் முழுவதும் 136 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை 39 பேர் இறந்துள்ளனர். பெரும் உயிர்த்தியாகத்தை காவல்துறையினர்செய்துள்ளனர். தமிழகத்தில் 98 சதவீதம் காவலர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். 2-வது டோஸ் 92 சதவீதம் முடித்துள்ளோம். இன்னும் சில நாட்களில் 100 சதவீதம் காவல்துறையினர் தடுப்பூசி போட்டு விடுவார்கள்.

காவலர்களை பாதுகாக்க கூடிய எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கொரோனா 3-வது அலை வரலாம் என எதிர்நோக்குகிறோம். முன்னெச்சரிக்கையாக செயல்பட உள்ளோம். அது தான் சாமர்த்தியமானது. அது தான் போர் தந்திரம். இனிமேல் எந்த இழப்பும் வந்து விடக்கூடாது.நாம் முன்களப்பணியாளர்கள்.சாலையில் நிற்கிறோம். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் போது கூட காவல்துறையினர் இருக்கின்றனர். காவல்துறையினருக்கு அதிகமான பாதிப்பு இருக்கிறது. காவலர் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நமது காவலர்கள் நலன் பேணி காக்கப்பட வேண்டும் என்பதனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் நலவாழ்வில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்களின் உடல் நலம் பேணிக்காகவே காவல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்