Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறை மற்றும் சின்னக்கல்லாரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே : யானைகளின் உயிரை காவு வாங்கும் மின்வேலிகள்: உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்