உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை இன்று ஆலோசனை நடத்துகிறது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படும் நிலையில், ஆளும் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையை நடத்தி முடித்துள்ளது.
இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்