திட்டமிட்டதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே, இன்றுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் யாரை சேர்ப்பது என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும், அரசமைப்பு திருத்த மசோதா மீது மக்களவையில் நேற்று அனைத்து கட்சியினரும் விவாதம் நடத்தினர். இந்தத் தொடரில் முதன்முறையாக அமைதியாக நடைபெற்ற விவாதத்துக்குப் பின், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மசோதா இன்று நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
இதையடுத்து, முன்கூட்டியே மழைக்காலக் கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்