சட்டக்கல்லூரி திறக்கும் தேதி குறித்து அம்பேத்கர் பல்கலைக்கழகம் மூலம் விரைவில் அறிவிக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டக் கல்லூரியில் படிக்க ஆன்லைனில் விண்ணப்ப விநியோகம் வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்றார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்