தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருது தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு விருது வழங்குவதோடு 25 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்க இருக்கிறார்.
இதே போல தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சிக்கான பட்டியலில் உதகமண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. திருச்செங்கோடு நகராட்சி இரண்டாம் இடத்தையும் சின்னமனூர் நகராட்சி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக திருச்சி மாவட்டம் கள்ளக்குடி தேர்வாகியுள்ளது. சிறந்த பேரூராட்சி பட்டியலில் கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் இரண்டாம் இடத்தையும், சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சிறந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விருது வழங்க உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்