கடல்நீர் மட்டம் உயர்வது சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்தாக முடியும் என நாசாவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக வெளியான அறிக்கையில், புவியின் வெப்பநிலை உயர்ந்து கடல்நீர்மட்டம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களில் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் கடல் நீர் மட்டம் எவ்வளவு உயரும் என்ற கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
இதன்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்கள் 2100-ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் தூத்துக்குடி நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்