Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா பரவல்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை

இந்தாண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வருகிற 29-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை விழா நடைபெறும் நிலையில், கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு, பக்தர்களுக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 10 நாட்களும் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதிளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்