மக்கள் செல்வாக்கு இருந்தும் கூட்டணி காரணமாக சட்டமன்ற தேர்தலில் தோற்றோம். பா.ம.க கூட்டணியில் இருந்ததால் ஒரு சமுதாயத்தினர் ஆதரித்தார்கள், ஒரு சமுதாயத்தினர் எதிராக வாக்களித்துவிட்டார்கள் என வேலூர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மண்டல அண்ணா தொழிற்சங்கத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பேசினார். அப்போது, “கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்ற இடங்களில் எல்லாம் நமக்கு வரவேற்ப்பு இருந்தது, மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால், வெற்றி வாய்ப்பை இழந்தோம். நாம்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இடையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஒரு பக்கம் நம்முடைய கூட்டணி, சமுதாயத்தின் அடிப்டையில் அமைந்துவிட்டது. இதனால் ஒரு சமுதாயத்தினர் கூட்டணியை ஆதரித்திர்கள் ஒரு பக்கம் எதிர்த்தார்கள் இது நமக்கு இடையூராக அமைந்தது.
பா.ம.கவும் நம்முடன் கூட்டணியில் இருந்தது. ஆகவே இதையும் ஒரு சமுதாயத்தினர் ஆதரித்தார்கள், ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நமக்கு எதிராக வாக்களித்து விட்டார்கள். ஆகவே, நமக்கு மக்கள் செல்வாக்கு இருந்தும் சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக ஆட்சிக்கு வரமுடியவில்லை” என கே.சி.வீரமணி பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்