எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது பழிவாங்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியால் நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
''ஆளுங்கட்சி என்ற மமதையில், எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் இதுபோன்ற செயல்களை செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் அதிமுக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளது. இது ஜனநாயக நாடு. ஜனநாயக ரீதியில் நாங்கள் இதை எதிர்கொள்வோம். நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவிப்போம்.
மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஏராளமாக உள்ளது. அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அதிமுகவை பழிவாங்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இது ஒருபோதும் வெல்லப்போவதில்லை. நீதிமன்றம் இருக்கும்போது, சட்டரீதியாக செல்லாமல், காவல்துறையை ஏவிவிட்டு, அதிமுகவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல் தான் இது'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்