Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 13 முதல் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆகஸ்ட் 13-ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
 
இந்த இரண்டு பட்ஜெட்டும் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர் மேஜை முன்பும் தனியாகக் கணினி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் குறித்து தினமும் விவாதங்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்