டெண்டர் முறைகேட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட வேலுமணிக்கு நெருக்கமான சந்திர பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு வேண்டியவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒதுக்கீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ், நிறுவன இயக்குனர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்