Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

சுதந்திர தின விழா கொண்டாட்டமான ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரில் இருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை தவிர்த்ததற்காக, மோடி அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பேனரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், நரசிம்மராவ், பகத் சிங், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் பிறரின் படங்கள் உள்ளன, ஆனால் அதில் நேருவின் படம் இடம்பெறவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் - மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், "இந்திய சுதந்திரத்தின் முன்னோடி குரலான ஜவஹர்லால் நேருவை தவிர்த்து சுதந்திர தினத்தை கொண்டாடுவது வெறும் அற்பமானது மட்டுமல்ல, வரலாற்றுக்கும் மாறானது. இது ICHR தன்னை இழிவுபடுத்தும் மற்றொரு சந்தர்ப்பம். இது ஒரு பழக்கமாகி வருகிறது!" என தெரிவித்தார்.

image

இது தொடர்பாக காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், "சுதந்திரப் போராட்டத்தை கொண்டாடும் எந்த நாடு தங்கள் முதல் பிரதமரை அதன் வலைத்தளத்திலிருந்து அகற்றும்? ஆர்எஸ்எஸ் இந்திய சுதந்திர இயக்கத்திலிருந்து விலகி இருந்ததை இந்தியா மறக்காது என தெரிவித்தார். கடந்த மாதம், மத்தியப் பிரதேசத்தில் ஒரு பாஜக அமைச்சர் பணவீக்கப் பிரச்சினை ஓரிரு நாளில் எழவில்லை என்று கூறினார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல் இருந்து ஜவஹர்லால் நேருவின் தவறுகளால் பொருளாதாரம் கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கியது எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பற்றி பேசும் மத்திய மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங், “ நாட்டின் முதல் பிரதமர் மற்றும் அவரது கட்சி பொருளாதாரத்தை நல்ல நிலையில் விட்டுவிட்டு சென்றிருந்தால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். நேருவின் தவறான கொள்கைகளே தற்போதைய நிலைக்குக் காரணம். தொழில்மயமாக்கல் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நமது நிலைமை வித்தியாசமாக இருந்திருக்கும்" என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்