Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் இன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்

தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. காலையில் பொது பட்ஜெட்டும், சனிக்கிழமை வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளில் கணினி பொருத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவாக வரியை உயர்த்த வேண்டும் ஆனால், இப்போதே உயர்வா என யாரேனும் கனவு கண்டால் அதற்கு பதில் கூற முடியாது என தெரிவித்தார்.
 
போக்குவரத்துத் துறை நிதிச் சுமையில் இருக்கும்போதும் தற்போதைக்கு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
 
மாநில வளர்சி குழு, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்கு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், அவற்றை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்