அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வணிக போட்டி சட்டங்களை மீறி செயல்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இவ்விரு நிறுவனங்களும் போட்டி ஆணையத்தின் விசாரணைக்கு தாமாக முன்வந்து ஒத்துழைக்கவேண்டும் எனத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு செல்போன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் டெல்லி வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த போட்டி ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தன. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றமும் தற்போது விசாரணைக்கு தடை விதிக்க மறுத்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்