Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இன்று நிழலில்லா நாள்: உங்கள் நிழலை இன்று பார்க்க முடியாது

ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் 'நிழலில்லா நாள்' இந்தாண்டில் இரண்டாவது முறையாக இன்று நிகழ்கிறது.
 
வருடந்தோறும் 2 நாட்களில் மட்டும் மதிய நேரத்தில் நிழலை பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் விழும். இதுதான் 'நிழலில்லா நாள்' என அழைக்கப்படுகிறது. இந்த 'நிழலில்லா நாள்' ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிழலில்லா நாள் வந்தது. ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில் இன்று (ஆக.18) மதியம் இந்த நிழலில்லா நாளை காண முடியும்.
 
image
ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் நிழலில்லா நாளை காண முடியும். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாள் குறித்து விளக்கம் அளிக்கவும், காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்