டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, டெண்டர்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணையும் நடந்தது. டெண்டர் முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்