ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஐவரின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ட்விட்டர் கணக்கை பூட்டி விட்டால் இந்தியாவுக்காக நடத்தும் போராட்டத்தை காங்கிரஸ் நிறுத்திக்கொண்டுவிடும் என பிரதமர் கருதுவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய அரசின் நெருக்கடி காரணமாகத்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட படத்தை ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது விதி மீறல் என கூறி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புகார் கொடுத்த நிலையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்