Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராக்கெட்டில் தொழில் நுட்பக் கோளாறு: இஓஎஸ் - 03 செயற்கைக் கோள் ஏவும் முயற்சி தோல்வி

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் பயணம் தோல்வியில் முடிந்தது.
 
புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன.
 
26 மணி நேர கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.பி. எப்.10 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டின் பயணத் திட்டம் முழுமை பெறவில்லை என்றும் செயற்கைக்கோள் 18.39 நிமிடத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையையை அடையவில்லை என்பதால் இத்திட்டம் தோல்வி எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்