Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா - இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
 
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது.
 
எனவே, இன்று லார்ட்ஸில் நடைபெறும் போட்டி மூலம் இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
 
image
நாட்டிங்காம் டெஸ்டின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச்சை நிறைவு செய்யாமல் தாமதித்ததாக இந்திய, இங்கிலாந்து அணியினருக்கு அவர்களின் ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் ஐசிசி அபராதம் விதித்தது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளிலும் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்