Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நாட்டிலேயே தேசிய கல்விக் கொள்கையை முதன்முதலில் அமல்படுத்தும் கர்நாடகா

கர்நாடகாவில் இந்தாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்தகவலை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே தேசிய கல்விக் கொள்கையை முதன்முதலில் அமல்படுத்தும் மாநிலம் என்ற பெயரை கர்நாடகா பெற்றுள்ளது.
 
பள்ளிக்கல்வியிலும் உயர் கல்வியிலும் சீர்திருத்தங்களை கொண்ட தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு கடந்தாண்டு ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அனைவருக்கும் தரமான, சமமான, குறைந்த கட்டணத்திலான கல்வி கிடைப்பதை தேசியக் கல்விக் கொள்கை உறுதிப்படுத்தும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
 
எனினும் தேசியக் கல்விக் கொள்கையில் அதிகாரங்கள் மத்திய அரசு வசம் குவிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் கூறி அதை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்