Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அதிமுக-திமுக எந்த வித்தியாசமும் இல்லை; திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது - கமல்ஹாசன்

'திமுக அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக  கமல்ஹாசன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது.
 
அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது'' எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்