அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரைக்க உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா நான்காம் அலை வேகமெடுத்துள்ளது. குறிப்பாக டெல்டா வகை பரவி வருவதால் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அரசின் மருத்துவர் நிபுணர்குழுவும் இந்த வாரம் இது தொடர்பான பரிந்துரையை வெளியிட உள்ளது. முதலில், மருத்துவ பணியாளர்கள், வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு பின்னர் அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்