Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெட்ரோல் போன்று டீசல் விலையை ஏன்? - ராஜன் செல்லப்பா கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

டீசல் விலையை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்களுக்கு ஏன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை எனவும் சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, டீசல் விலையை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல் உபயோகிப்பவர்களின் உரிய தகவல்கள் அரசிடம் இல்லை என்றும் அதனை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், 2 கோடி பேர் பெட்ரோல் பயன்படுத்துவதாக தெரிவித்த அமைச்சர், விலை குறைப்பு அவர்களை நேரடியாக சென்று சேர்ந்துள்ளதாக கூறினார். அரசு ஊழியர்களுக்கு ஏன் அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை என சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், சமூகநீதிக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்று அகவிலைப்படி உயர்வில் அரசு செயல்படும் எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்