Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ உயிரிழப்புகளோ ஏற்படுவது அரிது -ஐசிஎம்ஆர்

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
 
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்களின் கருத்து மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 500 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 32 கோடி சிறுவர், சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவை சுட்டிக்காட்டி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள் மூடலால் கிராமப்புற சிறுவர், சிறுமியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை திறப்பது நல்லது என்றும் ஆரம்பப் பள்ளிகளில் இருந்து இதை தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
image
காற்றோட்டமாகவும் இருக்கைகளிடையே இடைவெளி மிகுந்ததாகவும் வகுப்பறைகள் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மாணாக்கர், ஆசிரியரின் உடல் வெப்ப நிலையை கண்காணிப்பதுடன் கொரோனா பரிசோதனைகள் செய்யும் வசதியும் பள்ளிகளில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட மாணாக்கருக்கு முகக்கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து உணவுகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர் குழு கூறியுள்ளது.
 
சிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ உயிரிழப்புகளோ ஏற்படும் வாய்ப்பு அரிதிலும் அரிது என்று கூறியுள்ள நிபுணர் குழு, பள்ளிகளால் கொரோனா பரவவில்லை என்பது இதுவரையிலான அனுபவத்தில் தெரியவந்துள்ளதாக மருத்துவ கட்டுரையில் கூறப்பட்டுள்ளது
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்