Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்க ஹெலிகாப்டரில் மனிதரை தொங்கவிட்டபடி ரோந்து சென்றனரா தலிபான்கள்?.. நடந்தது என்ன?

அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு விலகி உள்ள நிலையில் அவர்கள் அங்கு விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்கள், விமானங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் தலிபான்கள் மனிதர் ஒருவரை தொங்கவிட்டபடி ரோந்து சென்றதை போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

தலிபான்கள் அப்படி செய்தனரா என்ற கேள்வியை அந்த வீடியோ எழுப்பியுள்ளது. ‘நாங்கள் முன்பு போல இல்லை. முற்றிலுமாக மாறிவிட்டோம்’ என தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது சொல்லி இருந்தனர். அப்படி இருக்கின்ற சூழலில் இது எப்படி நடந்து என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது தொடர்பாக சர்வதேச மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதில் பெரும்பாலான செய்திகள் தலிபான்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நபரை இப்படி தொங்கவிட்டுள்ளதாக சொல்லப்பட்டன. 

ஆனால் உண்மையை கண்டறியும் (Fact Checking) ஊடக நிறுவனங்கள் சில தலிபான்கள் அப்படி செய்யவில்லை என தெரிவித்துள்ளன. மாறாக அந்த நாட்டில் உள்ள கந்தஹார் மாகாணத்தின் ஆளுநர் மாளிகையில் தங்களது அமைப்பின் கொடியை கட்டி பறக்கவிடும் நோக்கில் ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து தலிபான் வீரரை கீழே இறக்க முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் காற்று அதிகம் இருந்த காரணத்தினால் தலிபான்கள் கொடியை கட்டாமல் திரும்பியுள்ளனர்.

இதையும் படிக்கலாம் : அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்