Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இறப்பிலும் இணைபிரியாத வயது முதிர்ந்த தம்பதியை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்த உறவினர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஓய்வு பெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரியொருவர் வயது மூப்பால் நேற்று இறந்திருக்கிறார். கணவர் இறந்த அதிர்ச்சியில், அவரின் மனைவியும் நேற்றைய தினமே இறந்திருக்கிறார். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியரை ஒன்றாக பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்துள்ளனர் உறவினர்கள்.
image
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் நைனா முகம்மது. 84-வயதான இவருக்கும் சுபைதா பீபி (வயது 70) என்பவருக்கும் கடந்த 1965-ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
நைனா முகம்மது, குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரியாக பணிசெய்து வந்தவர். கடந்த 1997-ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றுள்ளார். பின் தக்கலை மேட்டுக்கடை பகுதியிலுள்ள தனது மூத்த மகன் தௌபிக் அகமது வீட்டில் நைனா முகம்மது மற்றும் அவரது மனைவி சுபைதா பீபியும் வாழ்ந்து வந்துள்ளனர்.
image
நைனா முகம்மது கடந்த ஆறு மாதமாக முதுமை காரணமாக நோய்வாய்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கு ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து அவரது உடலை எடுத்து செல்லும் முன் அவரது முகத்தை காண மனைவி சுபைதா பீபியை உறவினர்கள் அழைத்துள்ளனர். கணவரின் உடலை பார்த்தவுடன் கதறி அழுதுள்ளார் மனைவி. அழுகையை தொடர்ந்து சுபைதா பீபி அந்த இடத்திலேயே பேச்சு மூச்சின்றி சுருண்டு மயங்கி விழுந்தும் இருக்கிறார்.
உடனடியாக உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, கணவன் - மனைவி இருவரையும் தக்கலை பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர். கணவர் நைனாவின் உடலை நேற்றும், மனைவி சுபைதா பீபி உடலை இன்றும் உறவினர்கள் ஒரே  பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்