Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விறுவிறுப்பாக நடக்கும் மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் ஐந்தாம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 30 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1,600 முகாம்களில் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 10.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் முகாம்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய கொரோனா தடுப்பூசி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்