Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை.. கடலுக்குள் 7.6 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட பாலம்

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை ஏழரை கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியபோது, சென்னை துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னை துறைமுகத்திலிருந்து மணலி வரை 7.6 கிலோ மீட்டருக்கு கடல் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரை 20 கிலோ மீட்டருக்கு இரண்டு அடுக்கு double tucker மேம்பாலம் 6 ஆயிரம் கோடி ரூபாயில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும், துறைமுகம் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்து கோயம்பேடு வரை கீழ்ப் பகுதியில் ஆறு லேன் துறைமுகத்தில் இருந்து மேல் பகுதியில் நான்கு லேன் மதுரவாயல் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

’இனி வார இறுதி நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும்’ - தமிழக அரசு அறிவிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்