Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 90% - ஆய்வில் தகவல்

தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை மருத்துவத்துறை ஆய்வு செய்து அதன் முடிகளை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்ப்பட்டு 33,575 பேர் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23,827 பேர் அதாவது 70.97 சதவிகதம் தடுப்பூசி செலுத்தாதவர்கள். முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தியவர்கள் 6,020 பேர். இது 17.93 சதவிகிதம் ஆகும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3,728 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள்.
 
கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,915. இவர்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை 2,161. அதாவது 74.14 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். முதல் டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்திய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் 510 பேர். இது 17.49 சதவிகிதம் ஆகும். இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் 244 பேர், அதாவது 8.37 சதவிகிதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
image
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33,575 பேரில் ஆயிரத்து 268 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் தகவல்களை ஆய்வு செய்த போது ஆயிரத்து 129 பேர், அதாவது 89.04 சதவிகிதம் பேர் தடுப்பூசியே செலுத்தின் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இது 7.41 சதவிகிதம் ஆகும். இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 45 பேர், அதாவது 3.55 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியும் உயிரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு தீவிர இணை நோய்கள் இருந்தததாக தமிழக மருத்துவத்துறை கூறுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று வலியுறுத்துகிறது மருத்துவத்துறை.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்