Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"இரக்க குணத்தால் யாரும் ஏமாந்து விடாதீர்கள்"- குழந்தைகளை முன்வைத்து மோசடி செய்யும் கும்பல்

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். இளகிய மனசுகாரர்களை குறிவைத்து, குழந்தைகளை காட்டி பணம் பறிக்கும் கும்பல் சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது. யார் அவர்கள். பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

குழந்தைகள் நலக் குழுவினரிடம் அக்குழந்தையை ஒப்படைக்கப்படும் "இந்த அஞ்சல் அட்டையில் இருக்கும் வாசகத்தை 100 பேருக்கு அனுப்பாவிட்டால், ரத்தம் கக்கி சாவாய்". எண்பது, தொன்னூறு ஆண்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு இதுமோன்ற மோசடிகள் சர்வ சாதாரணம். இதையே இந்த இருபத்தோறாம் ஆண்டில், சற்றே மாற்றி சூழ்நிலைக்கு ஏற்ப களம் இறங்கியுள்ளது ஒரு கும்பல்.

கொரோனா தொற்றால் தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் உறவை இழக்க நேரிட்டுள்ளது. குழந்தைகள் பலர் ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவுவதாக கூறி சமூக வலைதளங்களில் மோசடி பேர் வழிகள் பொய்யான தகவல்களை பரப்பி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது, "இரண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தையும், பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளது. இந்த குழந்தைகளின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள். இந்த குழந்தைகளை குழந்தை இல்லாதவர்கள் எவரேனும் தத்ததெடுக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்" எனக் கூறி குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அலைபேசிகளுக்கு செய்தி அனுப்பப்படுகிறது.

"தயவு செய்து இந்த செய்தியை பரவச்செய்யுங்கள் ஏதெனும் நல்ல உள்ளம் கொண்டவரும், குழந்தை தேவை உள்ளவர்களும் பார்த்து பயன் பெறட்டும்!. ஒரு சிறு பகிர்வு அந்த குழந்தைகளுக்கு வாழ்வை கொடுக்கும்!." என வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன்.

ஒரு குழந்தை தொடர்பாக இதுபோல பொதுவெளியில் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இளம் சிறார் நீதி சட்டத்தின் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். கொரோனாவாலோ, மற்ற காரணங்களாலோ ஒரு குழந்தை தன் பெற்றோர்களை இழந்துவிட்டால், உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். அவர்கள், அக்குழந்தையைக் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பார்கள்.

கொரோனா காலத்தில் பல்வேறு விதமான ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அது போல தான் இந்த குழந்தைகள் தொடர்பான மெசேஜ்ஜும். இரக்க குணத்தால் யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்