ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரோம் நகரில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மிச்செல் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் ஆகியோரை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பு வணிகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவின் செயல்பாடுகள், இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது என பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ரோமில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்