ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பை சிறையிலிருந்து 4 வாரங்களுக்குப்பிறகு வெளியே வந்தார்.
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். அவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது. இதையடுத்து ஆர்யன் கான் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. 2முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழனன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம். இருப்பினும், அதற்கான ஆவணங்கள் தொலைந்ததால், ஆர்யன் கான் சிறையிலிருந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலையில், ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள், "ஜாமீன் பெட்டியில்" இருந்து ஜாமீன் ஆவணங்களை எடுத்து, ஆர்யன் விடுதலைக்கான செயல்முறையைத் தொடங்கினர்.இதையடுத்து 11 மணி அளவில் சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் கான் வெளியேற, நின்றிருந்த அவரது வெள்ளைநிற ரேஞ்ச் ரோவர் காரில் ஏறிச் சென்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்