Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்குள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுதலில், வாக்கு சேகரிக்க சென்ற ஒரு தரப்பு வேட்பாளர்கள் மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கார் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இரண்டு முறை வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்த வைத்தியநாதன் என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த இந்திராணி குழந்தைவேலு என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு வேட்பாளர்கள் இடையே வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து கடும்போட்டி இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி: காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து; மீட்புப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி

image

இரண்டு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்தியநாதன் ஆதரவாளர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் வேட்பாளர் இந்திராணி குழந்தைவேலுவின் ஆதரவாளர்கள் அதேபகுதியில் காரில் இருந்துள்ளனர். அந்த கார், வைத்தியநாதன் ஆதரவாளர்கள் மீது மோதியுள்ளது. தங்கள் மீது வேண்டுமென்றேதான் காரில் மோதினர் என வைத்தியநாதன் வேட்பாளர்கள் தரப்பு கூறுகின்றனர். கார் படுவேகமாக வந்து மோதியதில் வீராச்சாமி (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு அமுதா என்ற மனைவியும், இரண்டு சிறு வயது மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  மேலும் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

image

விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் உயிரிழந்தவருக்கும் நியாயம் கேட்டு வைத்தியநாதன் ஆதரவாளர்கள் திருக்கோயிலூர் சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பாலபந்தல் காவல்துறை மற்றும் பகண்டை கூட்ரோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்