Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நாகை: காவல்துறையினர் அச்சுறுத்தல் தந்ததால் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

நாகையில் பெண் ஒருவர் காவலர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து விஷமருந்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மறைமலை நகரை சேர்ந்தவர் முகமது மெய்தீன். இவர் மீது காவல்துறையில் சில வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் கத்தியுடன் நின்றதாக வெளிப்பாளையம் போலீசார் முகம்மது மொய்தீனை கைது செய்தனர்.

image

இதற்கிடையில் நேற்று மாலை முகம்மது மெய்தீன் வீட்டில் அவரது மனைவி ரேவதி உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மெய்தீனை அவரது உறவினர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரேவதி மீது வழக்குப் போடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் ரேவதியை வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளார். இதனால் மனம் உடைந்த ரேவதி விஷம் அருந்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி: தற்கொலை எப்படி தீர்வாகும்? - மனநல ஆலோசகர்களின் விளக்கங்களும் தீர்வுகளும்!

image

இதனைடுத்து அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு நாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் தற்கொலைக்கு முயற்சித்த பெண் குறித்த இச்சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்