Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி அமோக வெற்றி

மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப்பெற்றார்.

பவானிபூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா டிப்ரேவாலை விட 52,832 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றிப்பெற்றார். முன்னதாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிபோதும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில் 6 மாதத்திற்குள் பேரவை உறுப்பினராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.

இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணமூல் உறுப்பினர் ராஜினாமா செய்த நிலையில் அந்த இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது வெற்றிப்பெற்று அம்மாநில முதல்வராக தொடர்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்