Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும்' - மத்திய அமைச்சர் நம்பிக்கை

பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மின்தட்டுப்பாடு நிலவிவருகிறது. தமிழகத்திலும் சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், ''கோல் இந்தியா லிமிடெட்டில் தற்போது 22 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. நேற்று 1.95 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவரை வழக்கப்பட்டதிலேயே இதுதான் அதிகம். நிலக்கரி விநியோகத்தை நாங்கள் தொடர்ந்து வேகமாக அதிகரிப்போம்.

மத்திய அரசுதான் காரணம்; தமிழகத்துக்கும் ஆபத்து' - நிலக்கரி தட்டுப்பாடு ஏன்? | explain about what is the reason behind coal shortage in india | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அக்டோபர் 21-க்குப் பிறகு, 2 மில்லியன் டன் நிலக்கரியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் தேவையான அளவு நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்வோம். சர்வதேச விலை உயர்வு உள்நாட்டு நிலக்கரி உற்பத்திக்கும் அழுத்தம் தந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்