Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்? - நிபுணர்கள் விளக்கம்

மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்? என்பது சமூகத்தில் பிரபலமானவர்கள் உயிரிழக்கும்போது ஒவ்வொரு முறையும் பேசுபொருளாகிறது. தமிழகத்தில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிப்புகள் எவ்வளவு? விழிப்புணர்வு உள்ளதா? - தெரிந்துகொள்வோம்.

தமிழகத்தில் நடைபெறும் உயிரிழப்புகளில் 36% நபர்கள் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள் என்ற தகவலைக் கூறுகிறது தேசிய நல்வாழ்வு குழுமத்தின் ஆய்வு. இவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் 60% வயதானவர்களும், 40% இளம் வயதினரும் அடங்குவர். அதேபோல், மருத்துவமனைக்கு வந்து சேரும் முன்பாகவே 50% நபர்கள் மாரடைப்பால் உயிரிழந்துவிடுகின்றனர் என பல்வேறு புள்ளிவிவரங்களை கூறுகிறது தேசிய நல்வாழ்வு குழுமம்.

புகைப்பழக்கம், உடல்பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்பாடின்றி இருத்தல் ஆகியவையும், இவற்றுடன் கூடிய மன அழுத்தமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்றும், இரவு தூக்கத்தை தவிர்த்தல், உடல் புத்துணர்வு பெறுவதற்கு தேவையான நேரத்தை வழங்காமை ஆகியவற்றை ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இதயவியல் துறை இயக்குநர் சுவாமிநாதன். இதய நோய்களைப் பொறுத்தவரை முறையான வாழ்வியல் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பெருமளவில் தடுத்துவிட முடியும் என்கிறார்.

image

நல்ல உடற்பயிற்சி இருப்பினும் கூட வெகு சிலருக்கு மரபுவழி இதய நோய்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம் என்பதும், ரத்தக்குழாயில் ஏற்கனவே ஏதேனும் பாதிப்பு இருப்போர் தீவிர உயற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதுகூட உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டு உடனடி உயிரிழப்பு ஏற்படலாம் என்பது இதய நிபுணர்கள் கருத்து. இதுபோன்ற உடனடி உயிரிழப்புகள் மாரடைப்பு ஏற்படுவோரில் 25% நபர்களுக்கு ஏற்படுகின்றன.

100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ 

நெஞ்சு எரிச்சல், படபடப்பு, தூக்கமின்மை அறிகுறிகள் தெரிந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அணுக வேண்டும். குறிப்பாக மாரடைப்பைப் பொறுத்தவரை சிறு சிறு கிளினிக்குகளில் சென்று நேரத்தை வீணாக்காமல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் இதயவியல் பேராசியர் மனோகர்.

image

இரத்த சிவப்பணுக்களின் அளவு, சிறுநீரில் யூரியாவின் அளவு, இரத்தக் குழாய் அடைப்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட சில அடிப்படை பரிசோதனைகளை 20 வயதைக் கடந்தோர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதைக் கடந்தோர் ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் இதயவியல் நிபுணர்கள்.

-சுகன்யா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்