தூத்துக்குடியில் வீட்டை எழுதி தர மறுத்த கணவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விளாத்திகுளம் அருகே வேம்பாரைச் சேர்ந்த இனிகோ - மரிய வினோ தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், இனிகோ பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுத மரிய வினோ வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கணவன் மீது, மரிய வினோ வெந்நீரை ஊற்றியுள்ளார்.
இதில் உடல் வெந்த நிலையில் நிலைக்குலைந்த இனிகோவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்ததோடு, கொலை முயற்சியிலும் மரிய வினோ ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்