ரகசிய தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடற்படை அதிகாரி உள்பட மூவரை, சிபிஐ கைது செய்துள்ளது.
சோவியத் யூனியனிடம் இருந்து இந்தியா 10 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியது. காலத்திற்கு ஏற்ப அவற்றை நவீனப்படுத்தி கடற்படை பயன்படுத்தி வருகிறது. இந்த நீர்மூழ்கி கப்பலில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மும்பையை சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவரின் உதவியோடு அந்த ரகசியங்களை கசியவிட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதனைப்படிக்க...“ஆண் -பெண் இடையே நடப்பதுதான் திருமணம்” - தன்பாலின திருமண வழக்கில் மத்தியஅரசு பதில்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்