Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

லக்கிம்பூர் விவகாரம்: நாளை குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கிறார் ராகுல் காந்தி

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளார் ராகுல் காந்தி.
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரி கேரியில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். ஆனால் சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை எடுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
image
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பஞ்சாப் முதல்வர் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பாகல் ஆகியோர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
 
image
இந்த நிலையில் லக்கிம்பூர் வன்முறை வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்