Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில், 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது. முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்