கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிவதை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் அவர்கள் செஃல்பியும் எடுத்து செல்கின்றனர்.
கொல்லிமலைப் பகுதியில் தொடர் கனமழை காரணமாக பெரியகுளம், சின்னகுளம், பழையபாளையம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின. இந்நிலையில், 388 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி நிரம்பி வழிகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது நிரம்பிய இந்த ஏரி அதன் பிறகு தற்போதுதான் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.
இந்த ஏரியின் உபரிநீர் வடிகால் வழியாக வெளியேறி ஆண்டாபுரம் ஏரிக்குச் செல்கிறது. ஏரி நிரம்பி வழிவதால் 3 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்