Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளைக்கு பதில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காற்றழுத்த பகுதி உருவான பிறகு வடமேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்