இந்தியா மற்றும் நியூசிலாந்து, கிரிக்கெட் அணிகள் கான்பூரில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் இந்தியா 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்திய அணி 51 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில், பூஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், ஜடேஜா என ஐந்து பேரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஷ்ரேயஸ் ஐயர், பொறுப்புடன் விளையாடி 65 ரன்களை சேர்த்தார். அதோடு அஷ்வின் மற்றும் சாஹாவுடன் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷ்ரேயஸ். அது இந்திய அணியை ஆட்டத்தில் வலுவான முன்னிலை பெற உதவியது. அஸ்வின் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயஸ் அவுட்டான உடன் அவர் விட்டு சென்ற பணியை சாஹா கவனித்து வருகிறார். அவருக்கு அக்சர் பட்டேல் உதவி வருகிறார். இருவரும் தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விக்கெட் கீப்பர் சாஹா அரைசதம் அடித்து களத்தில் விளையாடி வருகிறார்.
இந்த ஆட்டத்தில் இந்தியா நல்ல முன்னிலை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நான்காம் நாள் ஆட்டம் முழுவதையும் இந்தியா விளையாடினாலும் கடைசி நாளான நாளைய தினம் நியூசிலாந்து அணி பேட் செய்ய இந்தியா பணிக்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்