Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவது மாபெரும் குற்றமாகும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவது மாபெரும் குற்றமாகும் என்றும் அதை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

பாண்டிய பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கு விருதுகள் வழங்க திருப்பரங்குன்றம் பகுதிக்கு வருகை தந்த தமிழக தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தொல்லியல் துறைக்கான செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு..

“தொல்லியல் துறை சார்பில் முதல்வர் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே நடைபெற்று வரக்கூடிய அகழாய்வு பணிகளுக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய இடங்களில் அகழாய்வு பணி மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணி முடிவுற்று 8-ம் கட்ட ஆய்வு பணி தொடர்ந்து நடத்துவதற்கும், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கொற்கையில் கடல் ஆய்வுகள் மூலமாக புதிய கண்டுபிடிப்புகள் காணவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மாமன்னர் ராஜேந்திர சோழன் படையெடுப்பு வாயிலாக வெற்றி பெற்றுள்ள பல்வேறு இடங்களுக்கு தொழில்துறை சென்று ஆவணப்படுத்தி, வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் அரசாங்கத்திடம் அனுமதி பெற இருப்பதாகவும் தெரிவித்தார். சங்ககால துறைமுகமாக இருக்கக்கூடிய முசிறியில் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு துறையில் புதிய படைப்புகளை உருவாக்க அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. தொல்லியல் துறையும் அருங்காட்சியம் துறையும் இணைந்து உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அருங்காட்சியகத்தில் உலகத்தரம் வாய்ந்த புதிய கட்டிடம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் தொன்மை நாகரீகம் அமைப்பதற்கான 15 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் அமைக்க இடம் கண்டறியப்பட்டு பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு அறிக்கையை தயாராக உள்ளது. கீழடி பணிகள் விரைந்து நடைபெறுகிறது 12 கோடி செலவில் அமைய உள்ள கீழடி அருங்காட்சியகத்தை வெகு விரைவில் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.

image

மதுரையில் வேறு பகுதிகளில் உள்ள புராதன சின்னங்கள், கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு,

 “தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்க கடுமையான முறைகள் கொண்டுவரப்பட வேண்டும். கனிமவளத் துறை சார்பில் வந்துள்ள அரசாணையில் எந்த இடங்களில் தொல்லியல் சின்னங்கள் கிடைக்கப் பெற்றால் அப்பகுதியில் எந்தவிதமான குவாரி பணிகளும் நடைபெறக்கூடாது என கடுமையான அரசாணை வெளியிட்டு உள்ளோம். தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவது மாபெரும் குற்றமாகும் அதை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை சேதப்படுத்துவது என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும் தொல்லியல் சின்னங்களை காப்பாற்றுவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளை தொல்லியல்துறை மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.

கொரோனாவினால் சிறு குறு தொழில் பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பது? குறித்த கேள்விக்கு,

“சிறு குறு தொழில்களை மீட்டெடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் பல்வேறு அறிக்கைகளை அறிவித்துள்ளார். கொரோனாவினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்கு முதல்வர் பல்வேறு அறிக்கை வெளியிட்டிருந்தார். சிறு குறு தொழில் மூலமாக ஏற்றுமதி பாதிக்கக்கூடாது என்பதற்காக தொழிலாளர்களுக்கு முதன் முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏற்றுமதியாளர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டது.

image

பெருந்தொழில் முதலீடுகள் இருக்கக்கூடிய அதே வேளையில் சிறு தொழில்களையும் காப்பாற்றி அதையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு முனைப்பாக உள்ளது. ஆறு மாத காலத்திற்குள் ஏறத்தாழ 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கக் கூடிய இடங்களில் செய்யப்பட்டுள்ளது இரண்டு தொழில் முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற்றுள்ளது. அதேபோன்று கோவையில் நடைபெற்றது. முதல்வரின் அனுமதி பெற்று மற்ற பகுதிகளுக்கும் வரும். மாநாடுகள் சென்னை கோவையில் நடைபெற்று இருந்தாலும் ஈர்க்கப்பட்டு முதலீடுகள் அந்த முதல் அதிகமாக வரக்கூடிய தொழிற்சாலைகள் சென்னை யோஅல்லது கோயம்புத்தூர் என குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருந்துவிடாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக வரக்கூடிய சமச்சீர் தொழில் வளர்ச்சி காணக் கூடிய அளவில் தொழில் பகுதிகள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்” என கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்