Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"உலகமக்களின் பசியை 6 பில்லியன் டாலர்கள் தீர்க்காது;ஆனால்" - மஸ்க்-க்கு ஐநா அதிகாரி பதிலடி

“6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக மக்களின் பசியை எப்படி தீர்க்கும் என்பதை உலக உணவுத் திட்டம் எனக்கு இந்த ட்விட்டர் திரேட் மூலம் விளக்கினால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை இப்போது விற்பனை செய்து, அதை நான் செய்ய தயாராக உள்ளேன்” என ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார் உலக செல்வந்தர்களில் முன்னவராக இருப்பவர்களில் ஒருவரான எலான் மஸ்க். 

 

அவருக்கு ஐநா-வின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி (David Beasley) விளக்கம் கொடுத்துள்ளார். 

“உலக மக்களின் பசிப்பிணியை 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தீர்க்காது. ஆனால், அது புவிசார்ந்த அரசியல் ஸ்திரத்தன்மை, பெருவாரியான மக்களின் இடப்பெயர்வு மற்றும் பட்டினியால் வாடும் 42 மில்லியன் மக்களை காக்கும். கொரோனா, காலநிலை மாற்றம், மோதல்கள் மாதிரியானவற்றால் உலகளவில் எதிர்பாராத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் உதவியுடன் நம்பிக்கையை விதைக்கலாம். மாற்றத்தை கொண்டுவரலாம்” என அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜெஃப் பெசாஸ் மற்றும் எலான் மஸ்க் போன்ற சொல்வந்தர்கள் உலக மக்களின் பசியை போக்க ஒரு முறையேனும் முன்வர வேண்டும் என சொல்லி இருந்தார் டேவிட் பீஸ்லி.

இதையும் படிக்கலாம் : இந்தியா படுதோல்வி : ட்விட்டரில் எதிரொலிக்கும் Ban IPL முழக்கம்! அது தான் காரணமா? ஓர் அலசல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்