Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி

வழிகாட்டுதலுக்கு இணங்காதது தொடர்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 
வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டுதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சிவப்புக் கொடி கணக்குகளை முறையாக வகைப்படுத்தாதது, வருடாந்திர அறிக்கையில் பாதுகாப்பு ரசீதுகளுக்கான வழங்கல்களை வெளியிட அந்த வங்கி தவறிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
image
இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்பதால் இவ்விவகாரம் தொடர்பாக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கொடுத்தது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தரப்பு வாதத்தை கேட்டபிறகு அந்த வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்